செடிகளில் பூக்க வேண்டிய என்னை உன் இதயத்தில் பூக்கச் செய்தாய் நட்பாக, விலை கொடுத்து வாங்க வேண்டியப் பூக்களை விலை கொடுக்காமல் வாங்கி விட்டாய் உன் அன்பால், நண்பனாக / தோழியாக


Thursday, September 8, 2011

முதல் ரோஜா

முதல் முதல்
புன்னகை முகத்தோடு
கையிலே ரோஜா மலரோடு
கல்லூரி வாசலிலே ~ நீ காத்திருந்த
ஞாபகம் எப்போது நினைத்தாலும்
என்னை மலரவைக்கும்....!!!!

விழியோர கனவு

கனவிலாவது என்னோடு ~ ஒரு
நிமிடம் பேசிவிடு ~ உன்
திருமுகத்தை ஒரு முறை ~ என்
கண்ணில் வைத்து விடு..!!!

விழியோரம் வருகின்ற ~ கண்ணீரை
உன் கையால் துடைத்து விடு
உன் நினைவாக நான் இருப்பேன் ~ என்று
சொல்லி விட்டு சென்று விடு..!!!

நீயே என் கவிதை

கவிதை எழுத ஆர்வம்
தந்தவனும் நீயே ~ இன்று
கவிதை எழுத வைத்த
கவிஞனும் ~ நீயே
என் கவிதைக்குள்
கவிதை ஆனவனும் ~ நீயே

கவிதைக்குப் பொய் அழகு

கவிதைக்குப்
பொய் அழகாம்
என் கவிதையும் கூட ~ ஆனால்
பொய்யான நிஜம்
என் கனவுகளே
இன்று கவிதையாய்!

காதலிக்கும் நிழல்

உண்மைக் காதலரின் நிழல்கள்
எப்போதும் பேசும், காதலிக்கும்...
நீயும் காதலித்துப்பார்
உன் நிழலும் பேசும் காதலிக்கும்..
.

உனது பெயர்

கைகளில் உன் ~ பேரெழுதி
கன்னத்தில் வைத்துக்
கண்மூடும் போதும்……
நீ ~ எனக்கு
மிக அருகில்
இருப்பதாய் உணர்கிறேன்…