செடிகளில் பூக்க வேண்டிய என்னை உன் இதயத்தில் பூக்கச் செய்தாய் நட்பாக, விலை கொடுத்து வாங்க வேண்டியப் பூக்களை விலை கொடுக்காமல் வாங்கி விட்டாய் உன் அன்பால், நண்பனாக / தோழியாக


Friday, August 26, 2011

உனக்காய் உயிர்க்கவே

உனக்காய் உயிர்க்கவே
ஆசைப்படுகின்றேன்
உயிர்விட்டு போவதாயினும்
உனக்காய் உயிர்விட்டு போகவே
ஆசைப்படுகின்றேன்

அன்பே உன் பார்வை

சலனமற்றுக் கிடந்த
என் மனக்குளத்தில்
உன் பார்வை கணையை
எய்துவிட்டாய் ~ நீ
இல்லாம் என்னால் ~ இனி
சுவாசிக்க முடியாது
அன்பே..!!!

பாதுகாப்பு

என் காதலையும்
கவலையையும்
சொல்லிவிட முடியாத அளவுக்கு
காவல் அதிகம்
என்பதால்~துணைக்கு
என் கவிதைகளை
அழைத்துவந்தேன்
பாதுகாப்பாக...!

உன் ஞாபகங்கள்..!


பூட்டி விட்டு
கண்களை இருக்க
மூடிக் கொண்டு ~ தான்
தூங்கினேன்...!
அப்படி இருந்தும்
உள்ளே புகுந்து
உதைக்கின்றன
உன் ஞாபகங்கள்..!
தூங்கத் துடிக்கிற
ஒவ்வொரு இரவும்
தூங்க விடாமல்~உன் 
ஞாபகங்கள் என்னை
தட்டி தட்டி எழுப்பி
கதை பேசுகிறது.....!

Wednesday, August 24, 2011

காதல் ஒரு தலைக்காதல் அல்ல ~ நண்பா


ஒப்பற்ற கவிதை வரைய ~ என்

காதல் ஒரு தலைக்காதல் அல்ல ~ நண்பா

சந்தோஷம் துக்கம்

இன்பம் துன்பம்

பரிவு பாசம்

மூச்சு பேச்சு

வாக்கு

இவை போல

எனக்கு என்னவன் ஓர் உணர்வு!

என் உயிரிலும் ~ அவனை

பொதித்து வைத்திருக்கிறேன் ~ என் 

கிறுக்கல்களையும்

கவிதை என்று ரசித்தவன்

புன்னகை தவழும் 

குறும்பு கொப்பளிக்கும் ~ அவன்

முதன்பார்வையிலே

கரம் பற்ற சம்மதித்தேன்...!

அவன் அன்பு...,

கண்ணியம்

அக்கறை

இன்னமும்

அவன் கோபம்

அவன் சிறு மறதிகள்

என என்னவனின் ஒவ்வொரு அசைவையும்

முழுமையாய் ரசித்தவள் ~ நான்

இன்று.....!!!!!

நிரந்தரமான ஓய்வு 

நிம்மதியானத் தூக்கம் 

கவலையில்லாத வாழ்வு 

கனவுகள் இல்லாத உலகம் 

இப்படி எண்ணி 

கல்லறைக்குள் 

கண்ணயர்ந்து விட்டான்..? ~ என் மனசு

மெளனத்தின் ஓரத்தில்

நெஞ்சின் ஈரத்தில்

இராத்திரியில் கனவுகள்

பகலில் அவன் நினைவுகள்

இதுதான் என் வாழ்க்கை..!!!

என்னவன் எனக்குள்ளே....

சத்தமே இல்லாமல் இன்று

என் கவிதைக்குள்

கவிதை ஆனான்.......!