காதல் என்பது போர்க்களமா..? அதில்
வெற்றி கொள்ளத் தோற்கணுமா..?
காதல் என்பது ஓவியமா..? அதை
ரெண்டு பேருமாய் எழுதணுமா..?
காதல் என்பது காவியமா..? அதில்
கண்ணீர்த் துளிகள் நிரந்தரமா..?
காதல் என்பது புண்ணியமா..? அதில்
புனிதம் காப்பது அவசியமா..?
காதல் என்பது பொய்மாயமா..? ரெட்டை
வாழ்க்கை வாழ்வது நிதர்சனமா..?
காதல் என்பது செந்நிறமா..? சம
நீதிகள் அதில்தான் சாத்தியமா..?
காதல் என்பது தாய்மனமா..? இனை
கஷ்டத்தில் தானாகத் துடித்திடுமா..?
காதல் என்பது மலர்வனமா..? சிறு
சந்தோஷங்களின் பிறப்பிடமா...?
காதல் என்பது ஆத்திகாமா..? அவன்
காலடி மண்ணும் பிரசாதமா..?
காதல் என்பது நித்திலமா..? அது பல
சிப்பிகள் இடையே பூத்திடுமா..?
காதல் என்பது தத்துவமா..? சாகும்
வரையினில் கூடே தொடர்ந்திடுமா...?