செடிகளில் பூக்க வேண்டிய என்னை உன் இதயத்தில் பூக்கச் செய்தாய் நட்பாக, விலை கொடுத்து வாங்க வேண்டியப் பூக்களை விலை கொடுக்காமல் வாங்கி விட்டாய் உன் அன்பால், நண்பனாக / தோழியாக


Friday, June 3, 2011

உன் ஞாபகங்கள்.

விரைவில் நைந்து
கிழிந்தே போகக்கூடும்..
நான் புரட்டிக் கொண்டேயிருக்கும்
உன் ஞாபகங்கள்.

நட்பு என்பது

நட்போடு
சுற்றும் நாட்களை விட
அதன்
நினைவோடு நடமாடும் நாட்கள்
சுகமானது ....
நட்பு என்பது
கடிகாரம் முள் போன்றது
எப்படி சுற்றினாலும்
எங்க சுற்றினாலும்
ஒரு முறை எங்கயாவது
சந்திக்கும் ........!!!.

கண்ணீர்

இனியவனே இன்று வெறும் ஞாபகங்களாகவே
நிலைத்துவிட்ட - என வசந்தகால
நினைவுகளுக்காக
நான் ஒன்று மட்டும் செய்து கொள்கிறேன்!!!
நீ கற்றுத் தந்த கவிதைகளை
கண்ணீரால் மட்டுமே எழுதுகிறேன்!!!

கண்மணியில்

மனசை பறி கொடுத்தேன்
உன்னிடத்தில்
மீளப் பெற முடியாமல்
தவிக்கிறேன் உயிரோடு....
காதல் என்ற வார்த்தையை
நான் கேட்கும் போது
உன் முகம் மட்டுமே
என் கண்மணியில் தோன்றுகின்றது..
என் அன்பே...!

தலைகனம்

ஆம் நீ சொல்வது போல் எனக்கு
தலைகனம் அதிகம் தான்....
என் மூளையின் ஒவ்வொரு
அணுவிலும் நீ குடியிருப்பதினால்...

கனவுகள்

கனவுகள் அத்தனையும்
கற்பனை தான்...
நீ என்னை
காதலிப்பதாக கூறியதும்
கனவில் தான்...

உன்னைப் பற்றி!...

என்
கவிதைகள்தான்
எனக்கு
முதல்
துரோகி!!!
எழுதுவது
நான்!
பேசுவதெல்லாம்
உன்னைப்
பற்றி!...

இனிமை.. !

இரவு என்பது
பகலின் நிழல்,
காதல் என்பது
கண்ணீரின் நிழல்,
நட்பு என்பது
நம்பிக்கையின் நிஜம்,
நிழலாக இருப்பதைவிட
நிஜமாக இருப்பது இனிமை.. !

என்னவனே !

என்னவனே !
கவிதை என்றால்
உனக்கு ரெம்ப பிடிக்கும்... !
உன்னை நினைத்து
கவிதை எழுதுவது
மட்டும்தான்
எனக்கு பிடிக்கும்..... !!!

தூய்மையான , நட்பு !!!

உங்கள்
மனங்களில்
தேடுகிறேன் !
உண்மையான ,
வெண்மையான ,
தூய்மையான ,
நட்பை !!!

கண் தானம் செய்வோம்!

உன் கண்களால் அழகிய காட்சிகளை 
காணும் மனிதா... ..
உன் முடிவில் நீயும் தானம் செய் .....
அழியாமல் இருக்கும் உன் விழிகள்.....!

உதடுகள்

உதடுகள்
சொல்கிறது
உன்னுடன்
பேசும்போது
"நலம்" என்று...
ஆனால்
கண்கள் சொல்கிறது
உன்னை
காணத நாட்கள்
"நரகம்" என்று..

மிஞ்சியது - உன் காதல்!

உன் நினைவுகளை
கேட்டு வாங்கியதில்
கவிதையாக மட்டுமே
மிஞ்சியது -
உன் காதல்!

மொழிப் பெயர்ப்பு

எங்குதான்
கற்றுக்கொண்டதோ
என் விழிகள்
உன்
குறும் பார்வையின்
வார்த்தைகளை
மொழிப் பெயர்ப்பதற்கு

"தாஜ்மஹால்"

காதலின் சின்னம் கேட்டேன்
அவன் கல்லறை (தாஜ்மஹால்) என்றான்..
கல்லறைக்கு வழி கேட்டேன்...
என்னை காதலி என்றான்......

உன்னை காத‌லிக்க‌ ம‌ட்டுமே

எதை இழ‌ந்து தேடினாலும்
நீயே கிடைக்க‌ பெறுகிறாய்
எது தொலைந்து போனாலும்
உன்னாலேயே க‌ள‌வாட‌ப்ப‌டுகிற‌து
எவை ம‌ற‌க்க‌ப்ப‌டுகிற‌தோ
அவைக‌ளே நீயாகிறாய்
பின் என்ன‌தான் செய்வ‌தாம்
உன்னை காத‌லிக்க‌ ம‌ட்டுமே செய்வ‌தை த‌விற!

தெரியவில்லை

இப்பொழுதெல்லாம்..
உன் நினைவுகள்தான்
என் புதுக்கவிதைகள்.
முற்றுப்புள்ளிகளாய்...
கண்ணிர்த் துளிகள்!!

ஏனோ அழுகிறேன்..
ஏனோ ஏங்குகிறேன்..
உனக்காகவா?இல்லை..,
உன்னாலா?
தெரியவில்லை

உன் ஞாபகங்கள்...!

இறந்தாலும் இறக்காமல்
எனக்குள் உறங்கிக் கிடக்கும்
உன் ஞாபகங்கள்...!

என்னுள் உன்னை!!!!

மற்றவர்
பதிக்கத் தான்
முயல்வார்கள்
ஆனால் நீயோ
புதைத்துவிட்டாய்
என்னுள் உன்னை!!!!

நீயே கிடைக்க‌ பெறுகிறாய்

எதை இழ‌ந்து தேடினாலும்
நீயே கிடைக்க‌ பெறுகிறாய்
எது தொலைந்து போனாலும்
உன்னாலேயே க‌ள‌வாட‌ப்ப‌டுகிற‌து
எவை ம‌ற‌க்க‌ப்ப‌டுகிற‌தோ
அவைக‌ளே நீயாகிறாய்
பின் என்ன‌தான் செய்வ‌தாம்
உன்னை காத‌லிக்க‌ ம‌ட்டுமே செய்வ‌தை த‌விற!
நீ
எரியும் நெருப்பா ?
இல்லை !
கொட்டும் மழையா ?

மழையாய் உந்தன் வார்தைகள்
என்னை நனைத்தாலும் !!

நெருப்பாய் உன் நினைவுகள்
என்னை சுடுகின்றன....!!

நட்பின் மூலிகை....

என் மனசுக்கு
சுகமில்லை
எந்த மூலிகை
குணப்படுத்தும் ?
சில நாழிகை -உன்
நட்பின் மடியில்
தலை சாய்த்துக்
கொள்வதைத் தவிர.. ???

யுவராஜா....உன் பெயராக தான்

என் நினைவுகளுக்கு
செல்ல பெயர் வைத்தால்
அன்பே....
அது உன் பெயராக தான் இருக்கும்...
அங்கேயும் எப்போதும் உன் நினைவுகளே.

என் காவிய காதல்

உன்னை பார்த்த ...
விநாடி முதல்.........
எழுத தொடங்கினேன் .........
கவிதையை.............
புத்தகத்தில் அல்ல...............
ன் இதயத்தில்...............
காவியமாய்......................

போதை

கடைக்கண் பார்வையெல்லாம் தேவையில்லை
நீ கண் திறந்து என்னை
பார்ப்பதாக நினைத்துகொண்டாலே
போதை தலைஏறிவிடுகிறது

பயணம் உன்னுடன் மட்டும்....

பயணம் இனிமையாகிறது!
ஜன்னலருகில் இடம் கிடைத்தாலும்
உன்னருகில் இடம் கிடைத்தாலும்...

வானத்தை போல நீ

வானத்தை போல நீ
உயர
நினைக்கிறாய்...
நம்பிக்கை கொள்,
உனக்கு நானொரு
ஊன்றுகோலாய்
நிச்சயம் நான்
இருப்பேன்!.

Miss u

பசியாயிருக்கிறது
உன் வார்த்தைகளை மட்டும்
பரிமாறு...

விதி....

விலகி விலகிப் போனாலும்
விடுவதில்லை விதி....
எங்கோ இருந்த என்னையும்....
எங்கயோ இருந்த
உன்னையும்....
சேர்த்து வைத்து
வேண்டாம் என்றிருந்த
காதலையும்
வேதமாய் மாற்றி வைத்து
பசி பறித்து...
உறக்கம் கலைத்து...
சிந்தை எங்கும் உன் நினைவு
பரப்பி...
உன் மேல் பைத்தியமாய்
எனை மாற்றி விட்டு...
இன்று பார்த்துச் சிரிக்கின்றது
"பார்த்தாயா வென்றுவிட்டேன் நான்"
என்று!!!!!!!